WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, August 26, 2016

பாடத் திட்டத்தில் மாற்றம் தேவை: ஓய்வு பெற்ற நீதிபதி ஜெகதீசன்.


ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு (ஜே.இ.இ.) போன்ற பொது நுழைவுத் தேர்வுகளில் தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெற பிளஸ் 2 பாடத் திட்டத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என விடியல் அறக்கட்டளைத் தலைவரும், ஓய்வு பெற்ற நீதிபதியுமான ஜெகதீசன் கூறினார். சென்னையில்
வியாழக்கிழமை நடைபெற்ற "ஐ.ஐ.டி. சேர்க்கை தமிழ் மாணவர்களுக்கு ஒரு கனவு மட்டும்தானா?' எனும் கருத்தரங்கில், அவர் பேசியதாவது:- ஐ.ஐ.டி. சேர்க்கை என்பது தமிழக மாணவர்களுக்கு மிகப் பெரிய சவாலாகவே இருந்து வருகிறது. இதற்கு பிளஸ் 2 பாடத் திட்டம் பல ஆண்டுகளாக மாற்றப்படாமல் இருப்பதே முக்கிய காரணம்.  நுழைவுத் தேர்வுக்கென சிறப்புப் பயிற்சிகள் மாணவர்களுக்கு அளிப்பதால் எந்தப் பயனும் ஏற்படாது. இதனைக் கருத்தில் கொண்டு, மாநில பாடத் திட்டத்தில் உள்ள குறைபாடுகளைக் களைந்து, போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெறும் வகையில் திறனை மேம்படுத்த வேண்டும் தமிழக அரசு முன்வர வேண்டும். பள்ளிக் கல்வித் துறை முன்னாள் இயக்குநர் பரமசிவம்: பள்ளிப் பாடத் திட்டம் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றப்பட வேண்டும். 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பாடத் திட்டம், 10 ஆண்டுகளுக்கு முன்பு மாற்றப்பட்டது. அதன் பிறகு மாற்றம் செய்யப்படவே இல்லை. தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விகள் மாணவரின் புரிதலைச் சோதிக்கக்கூடிய வகையில் கேட்கப்பட வேண்டும். இதுபோன்ற கல்வி விஷயங்களில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது. மருத்துவப் படிப்புகளுக்கான "நீட்' நுழைவுத் தேர்வு அமல்படுத்துவதற்கு முன்னதாக, நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத் திட்டம் பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்யவேண்டும்.  பாரத் பல்கலை. துணைவேந்தர் பொன்னவைக்கோ: பொது நுழைவுத் தேர்வுகளில்சாதனை புரிய பாடத் திட்டத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டும். தரமான பள்ளிக் கல்வியைத் தருவது அதைவிட முக்கியமாகும். பள்ளிக் கல்வி தரமானதாக இல்லை. மாணவர் ஆசிரியர் விகிதாச்சாரமும் குறைவாக உள்ளது. 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற அளவில்தான் நியமிக்கப்படுகின்றனர். இந்த எண்ணிக்கை உயர்த்தப்பட வேண்டும்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.