WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, August 7, 2016

மேல்நிலை பள்ளி ஆசிரியர் கவுன்சிலிங் துவக்கம்.


அரசு உயர், மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் இன்று துவங்குகிறது. குளறுபடியை தடுக்க, இணை இயக்குனர்கள் அதிரடி சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு தொடக்க, நடுநிலை பள்ளி
ஆசிரியர்களுக்கான விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங், 3ம் தேதி துவங்கியது. இதை தொடர்ந்து, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு, இன்று முதல் கவுன்சிலிங் துவங்குகிறது. முதல் நாளில், மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்கப்படுகிறது. காலியிடங்களை மறைக்காமல், நேரடியாக, வெளிப்படையாக நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதனால், மாவட்டந்தோறும் மண்டல வாரியாக, இணை இயக்குனர்களுக்கு, கவுன்சிலிங் கண்காணிப்பு பணி வழங்கப்பட்டுள்ளது. கவுன்சிலிங் நடக்கும் இடங்களில், அதிரடி ஆய்வு மேற்கொள்ளவும், காலியிடங்களை மறைக்கும் கணினி அலுவலர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.