WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, August 2, 2016

சிண்டிகேட், செனட்டில் போட்டியிட அரசு அனுமதி தேவை : அரசு கல்லூரி பேராசிரியர்கள் அதிர்ச்சி.


சிண்டிகேட், செனட் அமைப்புகளில் போட்டியிட அரசு அனுமதி பெற வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டதால் பேராசிரியர்கள்
அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் 80க்கும் மேற்பட்ட அரசு கல்லூரிகள், 15க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவற்றில் சிண்டிகேட் அமைப்பு தலைவராக பல்கலை துணைவேந்தரும், செனட் அமைப்பு தலைவராக கல்லூரி முதல்வர்களும் செயல்படுகின்றனர். இந்த அமைப்புகளின் கூட்டங்களில், பல்கலை மற்றும் கல்லூரிகளில் நடக்கும் பல ஊழல், முறைகேடு உறுப்பினர்கள் மூலம் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த ஜூலை 15ம் தேதி உயர்கல்வித்துறை அரசாணை 137ஐ வெளியிட்டது. அதில், ‘’அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பணிபுரியும் முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்கள் சிண்டிகேட், செனட் அமைப்புகளுக்கு போட்டியிடுவதற்கு அரசின் அனுமதி பெற வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.