Tuesday, August 2, 2016
நீட் தேர்வுக்கு பார்லி. ஒப்புதல்.
நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கு அடுத்த ஆண்டு முதல் பொது நுழைவுத்தேர்வு (நீட்) நடத்துவதற்காக பொது மருத்துவ, பல் மருத்துவ சட்ட திருத்த மசோதாக்கள் மக்களவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டு விட்டது. இந்த மசோதாக்கள் மீது மாநிலங்களவையில் நேற்று குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், அதிமுக தவிர பெரும்பாலான பிற கட்சிகள் மசோதா நிறைவேற்ற ஆதரவு தெரிவித்தன.விவாதத்தில், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா கூறியதாவது:மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கையில் ஊழலை ஒழிக்கவே பொது நுழைவுத்தேர்வு முறை கொண்டு வரப்பட்டுள்ளது.
ஆனாலும், மாநில அரசுகளின் இடஒதுக்கீட்டில் தலையீடு இருக்காது. சிபிஎஸ்இ மற்றும் தேசிய தேர்வு வாரிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் தேர்வு நடத்தப்படும். கேள்வித்தாள்கள் மாநில மொழியிலும் தரப்படும். பொது நுழைவுத்தேர்வு மதிப்பெண்படி, தேசிய அளவிலான பட்டியலும், மாநில அளவிலான பட்டியலும் மாநில அரசுகளிடம் வழங்கப்படும். அதில் கிராமப்புற மாணவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது பற்றி முடிவு செய்து கொள்ளலாம்.இவ்வாறு கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.