WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, August 19, 2016

உதவி பேராசிரியர் பணி: டி.ஆர்.பி., வெளியீடு.

இன்ஜி., கல்லுாரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கு, விண்ணப்பித்தவர்களின் நிலை குறித்த பட்டியலை, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வெளியிட்டு உள்ளது. அரசு இன்ஜி., கல்லுாரிகளில், 192 உதவி பேராசிரியர் இடங்களுக்கு, அக்., 22ல் எழுத்துத்தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள், நேற்று முன்தினம் முதல், முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களில் வழங்கப்படுகின்றன; வரும், 7ம் தேதி வரை, விண்ணப்பங்களை அளிக்கலாம். இந்த காலியிடங்களுக்கு ஏற்கனவே, 2014ம் ஆண்டு முதல் அறிவிப்பு வெளியானது; அப்போதும் ஏராளமானோர் விண்ணப்பித்தனர்; அவர்கள், மீண்டும் விண்ணப்பிக்க வேண்டாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், 2014 விண்ணப்பங்களின் தற்போதைய நிலை குறித்த பட்டியலை, டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிட்டு உள்ளது

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.