WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, August 17, 2016

ஊர் மாறிய ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு கட்டுப்பாடு.


தொடக்கக் கல்வி ஆசிரியர்களில், ஒன்றியம் விட்டு ஒன்றியம் இடமாறுதல் பெற்றவர்களுக்கு, பணிமூப்பு ஊதிய உயர்வில் மாற்றம் கிடையாது என, அறிவிக்கப்பட்டு உள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆக., 3 முதல்,
கவுன்சிலிங் மூலம் விருப்ப இடமாறுதல் வழங்கப்படுகிறது. தொடக்கக் கல்வித் துறை மற்றும் பள்ளிக்கல்வித் துறை என, தனித்தனியாக கவுன்சிலிங் நடக்கிறது. இதில், தொடக்கக் கல்வித் துறையில், எட்டாம் வகுப்பு வரை பணியாற்றும் ஆசிரியர்கள், விருப்ப இடமாறுதலில், ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறினால், அவர்களுக்கு, பணிமூப்பு ஊதிய உயர்வு தனியாக பராமரிக்கப்படாது. அதாவது, ஏற்கனவே எந்த ஒன்றியத்தில் பணியாற்றினார்களோ, அந்த ஒன்றியத்தில், மூத்தவர், இளையவர் என்ற அடிப்படையில்தான், ஊதிய முரண்பாடு இருக்கும். மாறாக, புதிதாக சேர்ந்த ஒன்றியத்திலுள்ள மூத்தவர், இளையவர் பட்டியலை கணக்கிட்டு, அதன்படி, தமக்கு ஊதிய வேறுபாடு களையப்பட வேண்டும் என, கேட்கக் கூடாது என, தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன் உத்தரவிட்டு உள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.