WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, August 20, 2016

பல்கலைகளுக்கு ’கிடுக்கிப்பிடி’; மத்திய அரசு உத்தரவு

  கல்லுாரி மற்றும் பல்கலைகளின் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, 33 கேள்விகளுக்கு பதில் அளிக்குமாறு, பல்கலைகளின் துணை வேந்தர்கள், கல்லுாரி முதல்வர்களுக்கு, மத்திய அரசு அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் உள்ள கல்லுாரிகளில், பெரும்பாலானவை, சீர்மிகு கல்லுாரி, தன்னாட்சி அந்தஸ்து என, பல வகைகளில், மத்திய அரசிடம், பல கோடி ரூபாய் மானியம் பெறுகின்றன. ஆனால், கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், துணை வேந்தர் நியமனம், பேராசிரியர் நியமனம், ஆராய்ச்சி மையங்கள் மற்றும் புதிய பாடப்பிரிவுகள் ஏற்படுத்துவதிலும் முறைகேடுகள் உள்ளதாக, புகார்கள் எழுந்துள்ளன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அனைத்து கல்லுாரிகள், பல்கலைகள், துணைவேந்தர்கள் மற்றும் கல்லுாரி முதல்வர்களுக்கும், தனித்தனியே, 10 முதல், 33 கேள்விகள் அடங்கிய கேள்வித்தாளை, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., அனுப்பியுள்ளது. ஆசிரியர்கள் எத்தனை பேர் உள்ளனர்; மத்திய, மாநில அரசிடம் பெறும் நிதி எவ்வளவு போன்ற கேள்விகள் அதில் உள்ளன. மேலும், நியமனங்கள் முறையாக நடந்ததா; நியமனத்திற்கான கல்வித் தகுதி எவ்வளவு என்பன போன்ற, பல, கிடுக்கிப்பிடி விவரங்கள் கேட்கப்பட்டு உள்ளதால், துணை வேந்தர்கள், கல்லுாரி முதல்வர்களும் கலக்கத்தில் உள்ளனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.