WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, August 20, 2016

தொழிற்கல்வி ஆசிரியர்கள் கோரிக்கை.

அரசு பள்ளிகளில் பணியாற்றும், அனைத்து வகை ஆசிரியர்களும், உயர் கல்வியில் வேறு பாடங்கள் படித்தாலும், அவர்களுக்கு, இரண்டு ஊக்க ஊதியம் வழங்கப்படுகிறது. அதனால், தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும், இதேபோன்ற ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்' என, தமிழ்நாடு தொழிற்கல்வி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டம், திருவாரூரில் நடந்தது. இதுகுறித்து, மாநில அமைப்பாளர் எஸ்.என்.ஜனார்த்தனன் கூறியதாவது: உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் கிடைக்காமல், 3,000க்கும் மேற்பட்ட தொழிற்கல்வி ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். பதவி உயர்வு இல்லாத பணி இடங்களுக்கு, தேர்வு நிலை தர ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது; இதில், தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு, தேர்வு நிலை தர ஊதியம், 5,400 ரூபாய் என, அரசாணை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.