WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, August 13, 2016

பி.எட்., பயிற்சி: ஆசிரியருக்கு கெடுபிடி.

தொடக்க, நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியர்கள் பல்கலைகளில் தொலைதுார கல்வி மூலம் பி.எட்., படிக்கின்றனர். பி.எட்., படிக்கும்போது பள்ளியில் குறிப்பிட்ட காலம் பயிற்சி பெற வேண்டும். தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியர்கள், பல்கலை அனுமதிக்கும் பள்ளிகளில் பயிற்சி பெற வேண்டும். அதேபோல் நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியர்கள், அவர்கள் பணிபுரியும் பள்ளிகளிலேயே 6 முதல் 8 ம் வகுப்புகளில் பயிற்சி பெறலாம் என, தொடக்கக் கல்வித்துறை ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியர்கள், தாங்கள் பணிபுரியும் பள்ளிகளிலேயே பயிற்சி பெறுவதால், அவற்றை பணிக்காலமாக கருத வேண்டு மென, கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து 'இடைநிலை ஆசிரியர்கள் கண்டிப்பாக விடுப்பு எடுத்தே பி.எட்., பயிற்சி பெற வேண்டும். அரசாணையில் குறிப்பிடாததால் பயிற்சியை பணிக்காலமாககருத முடியாது,' என தொடக்கக் கல்வித்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.