WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, August 5, 2016

சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியாவதில் இழுபறி: லட்சக்கணக்கான மாணவர்கள் தவிப்பு.

சென்னை பல்கலைக்கழகத்தில் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தொடர் இழுபறி ஏற்பட்டு வருவதால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். கடந்த ஆண்டு மே, ஜூன் மாதங்களில் இளங்கலை, முதுகலை பட்டப் படிப்பில் பல்வேறு பாடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டது. மேலும், ஜனவரி மாதம் நடத்தப்பட்ட தேர்வுகளுக்கு மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் தயார் நிலையில் உள்ள போதும் தேர்வு முடிவுகளை வெளியிடாமல் சென்னை பல்கலைக்கழகம் தொடர்ந்து தாமதித்து வருகின்றது.  இதனால், மாணவர்கள் வேறு படிப்புகளுக்கு பதிவு செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு முடிவுகளுக்காக காத்திருக்கின்றனர். மாணவர்களின் நிலையைக் கருத்தில் கொண்டு சென்னை பல்கலைக்கழகம் உடனடியாக தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்று மாணவர்கள் தரப்பில் கோரிக்கைகள் வெளியிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.