Wednesday, August 31, 2016
கல்லூரிகளுக்கான 'நாக்' தர வரிசையில் மாற்றம்.
கல்லுாரிகளுக்கான, உயர் கல்வி தேசிய மதிப்பீடு தரவரிசை முறையில், திடீர் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. கலை, அறிவியல் கல்லுாரிகள் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரிகளின் செயல்பாடுகள், மாணவர்களின் தேர்ச்சி, உட்கட்டமைப்பு, ஆசிரியர் கல்வித்தகுதிகள் ஆராய்ச்சி அடிப்படையில், தரவரிசை நிர்ணயிக்கப்படுகிறது. மத்திய அரசின் தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலான, 'நாக்' அமைப்பு மூலம், நான்கு வகையாக தரவரிசை வழங்கப்பட்டது.மிகச் சிறந்த கல்லுாரிக்கு, 'ஏ' சிறந்த கல்லுாரிக்கு,'பி' - திருப்தியான கல்லுாரிக்கு,'சி' மற்றும் அதிருப்தி என்பதற்கு, 'டி' என, தரவரிசை தரப்பட்டது. இந்த ஆண்டு முதல், இந்த தரவரிசை ஏழு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 'ஏ பிளஸ் பிளஸ், ஏ பிளஸ், ஏ, பி பிளஸ் பிளஸ், பி, சி' மற்றும் 'டி' என, மாற்றப்பட்டுள்ளது. டி தரம் பெறும் கல்லுாரி கள், அதிருப்தி பட்டியலில் சேர்க்கப்படுகிறது. தற்போது, 'நாக்' அந்தஸ்து பெற்ற கல்லுாரி களுக்கு வழங்கப்பட்ட தரவரிசை அப்படியே தொடரும். புதிதாகவும், புதுப்பிக்கவும் வரும் கல்லுாரிகளுக்கு, புதிய முறையில், கிரேடு தரப்படும் என, நாக் கமிட்டி அறிவித்துள்ளது.
இதுகுறித்து, கல்வியாளர்கள் கூறும்போது, 'நான்கு தர வரிசையில், மிக சிறந்த செயல்பாடு கொண்ட உயர்தர கல்வி நிறுவனங்களை தனியாக பிரிக்க முடியவில்லை. இந்த ஏழு வகை தர வரிசை யால், கல்வி நிறுவனங்களின் அந்தஸ்து, ஓரளவுக்கு சரியாக பிரிக்கப்படும்' என்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.