WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, August 31, 2016

தேசிய திறனாய்வு தேர்வு தேதி திடீர் மாற்றம்.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான, தேசிய திறனாய்வு தேர்வு தேதி, தமிழகத்தில், திடீரென மாற்றப்பட்டு உள்ளது.பத்தாம் வகுப்பு மாணவர்களில், திறன்மிக்கவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு மத்திய அரசு, பிளஸ் 1 முதல், ஆராய்ச்சி படிப்பு வரை, மாதந்தோறும், கல்வி உதவி வழங்கி வருகிறது. இந்த தேர்வு, மாநில மற்றும் தேசிய அளவில் இரண்டு கட்டங்களாக நடக்கிறது. மாநில அளவிலான தேர்வு, நவ., 6ம் தேதி நடக்கும் என, தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, எஸ்.சி.இ.ஆர்.டி., அறிவித்தது. தமிழக அரசு தேர்வுத் துறை, இதற்கான அறிவிப்பை, சில வாரங்களுக்கு முன் வெளியிட்டது. தற்போது, தமிழகத்தில் தேர்வு தேதி மாற்றப்பட்டு உள்ளது. 'நவ., 6ம் தேதி, தமிழகத்தில், அரசு பணியாளர் தேர்வாணையத்தின், குரூப் - 4 தேர்வு நடப்பதால், தேசிய திறனாய்வு தேர்வு, நவ., 5ம் தேதி நடத்தப்படும்; இதற்கு, என்.சி.இ.ஆர்.டி., அனுமதி பெறப்பட்டு உள்ளது' என, தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.