WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, September 1, 2016

பி.எட்., 2ம் கட்ட கவுன்சிலிங் அறிவிப்பு.

பி.எட்., இரண்டாம் கட்ட கவுன்சிலிங், செப்., 15 மற்றும், 16ல் நடக்கிறது. ஏழு அரசு கல்லுாரிகள், 14 அரசு உதவி பெறும் கல்லுாரி களில், 1,777 பி.எட்., இடங்களுக்கு, தமிழக அரசு சார்பில், சென்னை லேடி வெலிங்டன் கல்வியியல் கல்லுாரியில், மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. கடந்த, 22ல், முதல் கட்ட கவுன்சிலிங் துவங்கி, நேற்று முடிந்தது; இதில், 1,314 இடங்கள் நிரம்பியுள்ளன. இரண்டாம் கட்ட கவுன்சிலிங், செப்., 15 மற்றும், 16ல் நடக்கும் என, மாணவர் சேர்க்கை கமிட்டி செயலர் தில்லை நாயகி அறிவித்துள்ளார். அவர் கூறும்போது, 'ஏற்கனவே விண்ணப்பித்தவர்களில், முதல் கட்ட கவுன்சிலிங்குக்கு அழைக்கப்படாத, 1,000 பேர் உள்ளனர். அவர்களுக்கான, 'கட் - ஆப்' மதிப்பெண், செப்., 9ல் இணையதளத்தில் வெளியிடப்படும். பின், தகுதி உள்ளவர்களுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்படும்' என்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.