Thursday, September 1, 2016
10ம் வகுப்பு தனித்தேர்வு நாளை முதல் விண்ணப்ப பதிவு.
'பத்தாம் வகுப்பு தனித்தேர்வுக்கு, நாளை முதல், செப்., 9ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்' என, அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து, அரசு தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தரா தேவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அக்., மாதம் நடக்க உள்ள, 10ம் வகுப்பு துணைத்தேர்வில் பங்கேற்க விரும்புவோர், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், குறிப்பிட்டுள்ள சேவை மையங்களில், நேரடியாக விண்ணப்பிக்கலாம். செப்., 2 முதல், 9 வரை, விண்ணப்பங்கள் பெறப்படும். சிறப்பு அனுமதி திட்டமான, 'தட்கல்' திட்டத்தில், செப்., 16 மற்றும் 17ம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம். அறிவியல் பாடத்தில் தேர்வு எழுத விரும்புவோருக்கு செய்முறை பயிற்சியும், தேர்வும் அவசியம். மேலும் விபரங்களை, இணையதளத்தில் அறியலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.