Wednesday, September 21, 2016
பி.எட்., கல்லூரி சேர்க்கை செப்., 30 வரை அவகாசம்.
பி.எட்., கல்லுாரிகளில், மாணவர்களை சேர்க்க, கூடுதலாக, 10 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை கட்டுப்பாட்டில், ஏழு அரசு கல்லுாரிகள், 14 அரசு உதவிபெறும் கல்லுாரிகள் உள்ளன. மாணவர் சேர்க்கையை, செப்., 16ல் முடிக்க, தனியார் கல்லுாரிகளுக்கு, ஆசிரியர் கல்வியியல் பல்கலை உத்தரவிட்டது.
'சேர்க்கையை திடீரென நிறுத்துவதால், பல ஆயிரம் இடங்கள் காலியாகும்' என, கல்லுாரிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதுகுறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானது. உயர் கல்வி அதிகாரி கள் அவசர ஆலோசனை நடத்தி, தனியார் கல்லுாரிகளின் மாணவர் சேர்க்கைக்கு, வரும், 30ம் தேதி வரை கூடுதல் அவகாசம் அளித்துள்ளனர்.'செப்., 30க்கு பின், மாணவர்களை சேர்த்தால், அதற்கு அங்கீகாரம் கிடைக்காது' என, பல்கலை பதிவாளர் தெரிவித்து உள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.