WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, September 21, 2016

எம்.பி.பி.எஸ்., 'அட்மிஷன்:' யு.ஜி.சி., எச்சரிக்கை.

அனைத்து நிகர்நிலை மருத்துவ பல்கலைகளும், 'நீட்' மதிப்பெண்படியே, மாணவர்களை சேர்க்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து,
பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., வெளியிட்டுள்ள எச்சரிக்கை: எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மருத்துவ படிப்புக்கு, 'நீட்' எனும் தகுதித்தேர்வு நடத்தப்பட்டு உள்ளது; இதில் எடுத்த மதிப்பெண்படி, மாணவர் சேர்க்கை நடத்த, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிகர்நிலை மருத்துவ பல்கலைகளும், யு.ஜி.சி., யின் விதிகளை பின்பற்ற வேண்டும். இந்த பல்கலைகள், அந்தந்த மாநில பொது கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும். பொது கவுன்சிலிங் நடத்தப்படாவிட்டால், 'நீட்' தேர்வு அடிப்படை யில் தான், மாணவர்களை சேர்க்க வேண்டும்; அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, 'அட்மிஷன்' மறுக்கப்பட்டால், பல்கலை மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.