WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, September 5, 2016

379 ஆசிரியர்களுக்கு ராதாகிருஷ்ணன் விருது.


தமிழகத்தில், 379 ஆசிரியர்களுக்கு, டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது இன்று வழங்கப்படுகிறது. ஆசிரியர் தினத்தையொட்டி, பள்ளி ஆசிரியர்களுக்கு,
டாக்டர் ராதா கிருஷ்ணன் விருதை, தமிழக அரசு வழங்கி வருகிறது. இந்த ஆண்டு விருதுக்கு, 379 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். சென்னை சாந்தோம், செயின்ட் பீட்ஸ் பள்ளியில்,இன்று மாலை, 4:00 மணிக்கு நடக்கும் விழாவில்,பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன், விருதுகளை வழங்குகிறார். ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட வாழ்த்து செய்தியில், 'விருதுக்கான ரொக்கப் பரிசு,5,000 ரூபாயிலிருந்து, இந்தஆண்டு முதல், 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது' என, தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.