WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, September 8, 2016

குரூப் - 4' விண்ணப்பிக்க முடியாமல் தவிப்பு : டி.என்.பி.எஸ்.சி., இணையதளம் முடங்கியது.


தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள, 'குரூப் - 4' பணிகளுக்கு விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள். ஆனால், டி.என்.பி.எஸ்.சி., இணையதளம், இரண்டு நாட்களாக முடங்கியதால், பல லட்சம் இளைஞர்கள் விண்ணப்பிக்க
முடியாமல் தவித்தனர். தமிழக அரசுத் துறையில் காலியாக உள்ள, இளநிலை உதவியாளர், வரி வசூலிப்பாளர், கள அளவையாளர், டைப்பிஸ்ட், சுருக்கெழுத்தர் உள்ளிட்ட, ஏழு வகை பதவிகளில், 5,451 காலி இடங்கள் உள்ளன. இந்த இடங்கள், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., மூலம் நிரப்பப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு, ஆக., 9ல் வெளியானது. நவ., 6ல் எழுத்து தேர்வு நடக்கிறது. இதற்கு, 10ம் வகுப்பு படித்தோர் முதல், பட்ட தாரிகள் வரை விண்ணப்பித்து வருகின்றனர். விண்ணப்பிக்க, இன்று, கடைசி நாள். இரண்டு நாட்களாக, டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தின், 'ஆன்லைன்' விண்ணப்ப பிரிவு முடங்கி உள்ளதால், இளைஞர்கள், தங்கள் விண்ணப்பம், ஆவணங்களை பதிவேற்றம் செய்ய முடியாமல், அவதிக்கு ஆளாகி உள்ளனர். இதுகுறித்து, வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்கள் கூறுகையில், 'இணையதளம் முடங்கியதால், சரியாக விண்ணப்பிக்க முடியவில்லை; பல விண்ணப்பங்கள், அரைகுறையாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்ப தேதியை, 15 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும்' என்றனர். இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகள் கூறுகையில், 'ஒரே நேரத்தில், பல ஆயிரம் பேர், இணையதளத்தை பயன்படுத்துவதால், சில இடங்களில் பிரச்னை ஏற்பட்டுள்ளது; இன்று சரியாகிவிடும்; அனைவரும் விண்ணப்பிக்கலாம்' என்றனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.