தமிழக அரசின் பொது மற்றும் சமூகப்பிரிவு தொடர்பான இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறை தலைவரின் அறிக்கையில் (2015 மார்ச் முடிய) கூறப்பட்டு இருப்பதாவது:
சேலம், விழுப்புரம், திருவண்ணா மலை, தஞ்சாவூர்,
தேனி, ஈரோடு, திண்டுக்கல், திருப்பூர் ஆகிய மாவட்டங் களில் 2010-12-ல் தரம் உயர்த்தப்பட்ட 83 அரசு பள்ளிகளில் 58 பள்ளிகள் கட்டிடம் கட்டுவதற்கு சொந்த இடம் இல்லாமலேயே தரம் உயர்த்தப்பட்டிருப்பது ஆய்வின் போது தெரியவந்தது. கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை இந்த பள்ளிகளில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவில்லை.
மேலும், உயர்நிலைப் பள்ளி கட்டிடங் கள் கட்டப்படாத காரணத்தினால் 56 பள்ளிகளில் போதிய வகுப்பறைகள் இல்லை என்பதும் கண்டறியப்பட்டது. வகுப்புகள் திறந்தவெளியிலும் அதாவது தாழ்வாரங்கள், மரத்தடி, சைக்கிள் நிறுத்துமிடம் போன்ற இடங்களிலும் தடுப்பு போட்டு பிரித்த பகுதிகளில் நடத்தப்பட்டன.
இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.