WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, September 3, 2016

ஆசிரியர் கவுன்சிலிங் விதிமுறையில் மாற்றம்.


தமிழகத்தில், இன்று துவங்கும் பட்டதாரி ஆசிரியர் பொதுமாறுதல் கவுன்சிலிங்கில் சில மாற்றங்களை பள்ளிக்கல்வித்துறை செய்துள்ளது. உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு, இன்று மாவட்டத்திற்குள் இடமாறுதல் கவுன்சிலிங் நடக்கிறது. நாளை,
மாவட்டங்களுக்கு இடையே நடக்கிறது. இரு கவுன்சிலிங்குகளும் கடந்த ஆண்டு வரை, 'ஆன்லைன்' மூலம் நடத்தப்பட்டன. மாவட்டத்திற்குள் இடமாறுதல் கவுன்சிலிங்கை, 'ஆன்லைனில்' நடத்துவதால்,'சீனியர்' ஆசிரியர்கள் முன்னுரிமை அடிப்படையில் இடங்களை தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. 'ஜூனியர்' ஆசிரியர்களே அதிக பலன் அடைந்தனர். இதற்கு ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து மாவட்டத்திற்குள் இடமாறுதல் கவுன்சிலிங்கை, 'ஆன்லைனில்' இல்லாமலும், மாவட்டங்களுக்கு இடையே, 'ஆன்லைனிலும்' நடத்த பள்ளிக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜூ கூறுகையில், “ புதிய நடைமுறையால் சீனியர் ஆசிரியர்கள் இடங்களை தேர்வு செய்வதில் சிக்கல் இருக்காது. அதேபோல் மாவட்டங்களுக்கு இடையே, 'ஆன்லைனில்' நடத்தும்போது, ஆசிரியர்கள் வெளி மாவட்டங்களுக்கு அலைவது தவிர்க்கப்படும்,” என்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.