WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, September 3, 2016

ஆசிரியர் கற்பித்தல் பயிற்சியில் : கல்வித்துறை உத்தரவால் குழப்பம்.


தொலைதுார கல்வி மூலம் பி.எட்., படிக்கும் ஆசிரியர்கள் கற்பித்தல் பயிற்சி பெறும் விஷயத்தில், கல்வித் துறையின் முரண்பட்ட உத்தரவால் குழப்பம்
அடைந்துள்ளனர். பி.எட்., படிக்கும் நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியர்கள், தமிழாசிரியர்கள் விடுப்பு எடுத்து உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் கற்பித்தல் பயிற்சி பெற்றனர். இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது. இதையடுத்து விடுப்பு எடுக்காமலேயே, அவரவர் பணி புரியும் நடுநிலை பள்ளிகளிலேயே கற்பித்தல் பயிற்சி மேற்கொள்ள, 2015 மார்ச், 13 ல் பள்ளிக் கல்வி செயலர் உத்தரவிட்டார். இதே நிலை தான் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளிலும் உள்ளன. கடந்த ஆக., 11 ல் தொடக்க கல்வி இயக்குனர் அனுப்பிய சுற்றறிக்கையில், 'அவரவர் பணிபுரியும் பள்ளியில் கற்பித்தல் பயிற்சி எடுத்தாலும் விடுப்பு எடுக்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்வி செயலர் விடுப்பு எடுக்க தேவையில்லை எனவும்; தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் விடுப்பு எடுக்க வேண்டும் எனவும் கூறியிருப்பது ஆசிரியர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு உறுப்பினர் பாண்டியராஜன் கூறியதாவது: கல்வித்துறையின் முரண்பட்ட உத்தரவால் ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். தற்போது தொலைதுார கல்வியில் கற்பித்தல் பயிற்சியை, 90 நாட்களாக பல்கலைகள் அதிகரித்துள்ளன. அதிக நாட்கள் ஆசிரியர்கள் விடுப்பு எடுக்கும்போது மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும். எனவே, பள்ளி கல்வி செயலரின் உத்தரவை அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.