WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, September 2, 2016

செட் தேர்வு முடிவினை வெளியிட மதுரை கோர்ட் பிறப்பித்த உத்தரவினை காற்றில் பறக்கவிட்ட அன்னை தெரெசா பல்கலை கழகம்

தமிழகத்தில் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள்  பணிப்பெறுவதற்க்கான நடத்தப்படும் மாநில அளவிலான செட்  தகுதித்தேர்வினை  பல்வேறு குளறு படிகளுக்கு  மத்தியில்   21.2.2016 அன்று அன்னை தெரேசா பல்கலை கழகம் நடத்தியது.
பல்கலைக் கழகம் வேக வேகமாக அறிவிப்பினை வெளியிட்டு தேர்வினை நடத்தியது.தேர்வு எழுதியவர்களுக்கு கார்பன் தாள் வழங்கப் படவில்லை . அது மட்டுமல்லாமல் செட் தேர்வு முடிவினை எப்பொழுது வெளியிடுவீர்கள் என தகவல்  அறியும் உரிமை சட்டம்  வாயிலாக திருவண்ணாமலைப் பகுதி நாவக்கரையைச் சேர்ந்த விக்டர் மனு செய்தமைக்கு ஜீலை மாதத்தின் இறுதியில் செட் தேர்வு முடிவு வெளியிடப்படும்  என பதில் கடிதம் பதிவாளர்  மற்றும் பொது தகவல் அலுவலர் என்ற பொறுப்புடன் M.கலா என கையொப்பம் இட்டு பல்கலை கழகத்தால் 8.7.16 ல் அனுப்பியது.அதன் படியும் தேர்வு முடிவு வெளியிடவில்லை.கால தாமதம் ஆகி கொண்டே இருக்கையில் கன்னியாகுமரி மாவட்டம் மணலிக்கரையைச் சேர்ந்த அந்தோணி குமார் வழக்கு தொடர்ந்ததிற்கு  29.7.16 வந்த  செய்தி தாளில்  மதுரை கிளை நீதிமன்றத்தின் நீதி அரசர்  ராஜா அவர்களின் உத்தரவு படி 4 வாரத்திற்குள் தேர்வு முடிவினை வெளியிட வேண்டும் என உத்தரவு கிடைத்ததது.அதற்கும் அன்னை தெரெசா பல்கலை கழகம் செவி மடுக்கவில்லை. இது கல்வியாளர்கள் மத்தியில் மிக மிக அவல நிலையை உருவாக்கியுள்ளது.எனவே தமிழக அரசு செட்  தேர்வு முடிவினை விரைவில் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.