WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, September 25, 2016

முறைகேடு நடக்காமல் தடுக்க விரைவில் டி.ஆர்.பி., 'ரிசல்ட்'.


பள்ளி கல்வியில், 272 விரிவுரையாளர் பணியிடத்திற்கான தேர்வில், முறைகேடுகளை தவிர்க்க, தேர்வு முடிவை விரைந்து வெளியிட, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது. தமிழக
பள்ளிக்கல்வித் துறையின், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, எஸ்.சி.இ.ஆர்.டி.,யில், 272 விரிவுரையாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களை நிரப்ப, செப்., 17ல், தேர்வு நடந்தது. மதுரை தேர்வு மையம் ஒன்றில், தேர்வு எழுதிய பெண் மூலம் வினாத்தாள், 'வாட்ஸ் ஆப்'பில் வெளியானது. இதுகுறித்து, விசாரணை நடந்து வருகிறது.தேர்வு முடிவை வெளியிட தாமதித்தால், இந்த பிரச்னையை மையப்படுத்தி, யாராவது வழக்கு தொடரலாம் என்பதால், தேர்வு முடிவை விரைந்து வெளியிட, டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது. தேர்வுக்கான உத்தேச விடை வெளியிடப்பட்டு உள்ளது; தேர்வு எழுதியோர் தங்கள் கருத்துகளை, டி.ஆர்.பி.,க்கு அனுப்பலாம் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.