பத்தாம் வகுப்பு, சிறப்பு துணைத் தேர்வு எழுதியவர்களுக்கு, வரும், 19 முதல், அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து, தேர்வுத்துறை
இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஜூன், ஜூலையில், 10ம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, ஜூலை, 28 முதல், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த சான்றிதழ், அக்., 25 வரை மட்டுமே செல்லும். அசல் சான்றிதழ், வரும், 19 முதல், 26 வரை, தேர்வு மையங்களில் வழங்கப்படும். ஞாயிறு தவிர்த்து, அலுவலக நேரங்களில், சான்றிதழை பெற்று கொள்ளலாம். அக்., 26க்கு பின், தேர்வுத்துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களில், சான்றிதழ் கிடைக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.