தொடக்கக் கல்வித் துறையில், ஆசிரியர் தேர்வு வாரிய தர எண் அடிப்படையில், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும்' என, பட்டதாரி
ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம், பொதுச் செயலர் பி.பேட்ரிக் ரைமண்ட் தலைமையில், சென்னையில் நடந்தது. இதில், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமிக்கப்பட்ட, தொடக்கக் கல்வி பட்டதாரி ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரிய தர எண் அடிப்படையில், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், தொடக்கக் கல்வித் துறையில், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு, பட்டதாரி ஆசிரியர்கள், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, தலா, 50 சதவீத முன்னுரிமை வழங்க, அரசாணை வெளியிட வேண்டும் என்பது உட்பட, வேறு பல தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.