WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, October 10, 2016

பேராசிரியர் பணிக்கான தேர்வு: 2,300 விண்ணப்பம் தள்ளுபடி.

இன்ஜினியரிங் கல்லுாரிகளில் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்களில், 2,300 பேர் விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டு
உள்ளன.அரசு இன்ஜி., கல்லுாரிகளில், 192 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான, எழுத்துத் தேர்வை, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வரும், 22ல் நடத்துகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட, 11 மாவட்ட தேர்வு மையங்களில், இந்தத் தேர்வு நடக்கிறது. இதற்கு விண்ணப்பித்தோரில், 2,294 பேர், ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனர். அவற்றில், தலா ஒரு விண்ணப்பம் ஏற்கப்பட்டு, மற்ற விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. அத்துடன், தகுதி இன்றி விண்ணப்பித்த, 32 பேருடையது உட்பட, 2,300க்கும் மேலான விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இதற்கான பட்டியல், டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.