Wednesday, October 19, 2016
முன் அரையாண்டு தேர்வால் பிளஸ் 2 மாணவர்கள் பாதிப்பு.
தமிழக தனியார் பள்ளிகளில், பிளஸ் 1 படிக்கும் போதே, பிளஸ் 2 பாடங்கள் நடத்தி முடிக்கப்படுகின்றன.
பின், பிளஸ் 2வில் மீண்டும், ஒருமுறை நடத்தப்படுகிறது. ஆனால், அரசு பள்ளிகளில், பிளஸ் 2 வகுப்பு துவங்கும் போது மட்டுமே, பிளஸ் 2 பாடங்கள் நடத்தப்படுகின்றன.
இந்நிலையில், அரையாண்டு தேர்வுக்கு முன், அனைத்து பாடங்களையும் நடத்தி முடிக்க, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். அதே நேரம், அரையாண்டு தேர்வுக்கு முன், நவ., 15 முதல், 25க்குள், முன் அரையாண்டு தேர்வு என்ற புதிய தேர்வை நடத்த, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
இதற்கு, ஆசிரியர்கள் தரப்பில் எதிர்ப்பு எழுந்துள்ளது. அரையாண்டு தேர்வுக்கு முன், பாடங்களை நடத்தவே நாட்கள் இல்லை; மழைக் காலமும் வருகிறது. இந்நிலையில், இன்னொரு தேர்வு வைத்தால், அதற்கு, 10 நாட்களாகும். அதனால், பாடம் நடத்துவது பாதிக்கப்படும்&' என, தெரிவித்து உள்ளனர்.
இது குறித்து, பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாகி இளங்கோ கூறியதாவது:
ஏற்கனவே, அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில், பயிற்சி வகுப்பு நடத்துகின்றனர். அதில் பங்கேற்பதால், ஐந்து நாட்கள் பாடம் நடத்த முடிவதில்லை.
பண்டிகை விடுமுறைகள் வருகின்றன; அதை ஈடுகட்டவே திணறும் சூழலில், முன் அரையாண்டு தேர்வு நடத்தினால், உரிய காலத்தில் பாடங்களை முடிக்க இயலாது. இவ்வாறு அவர் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.