WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, October 19, 2016

ஏழு மாவட்ட ஆசிரியர்க்கு மூன்று நாள் பயிற்சி முகாம்.

: சென்னை உள்ளிட்ட, ஏழு மாவட்ட ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு, சென்னை அனைவருக்கும் கல்வி இயக்கக அலுவலகத்தில், மூன்று நாள் பயிற்சி முகாம் நடந்து வருகிறது. அனைவருக்கும் கல்வி இயக்ககம் மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இணைந்து, மண்டல அளவிலான, பள்ளிகளுக்கான தர மேம்பாட்டு பயிற்சி முகாமை நடத்தி வருகின்றன. மூன்று நாள் நடைபெறும் இந்த பயிற்சி முகாமை, சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அனிதா துவக்கி வைத்தார். இப்பயிற்சியில், உதவி கல்வி அலுவலர், ஆசிரிய பயிற்றுனர்கள், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளிகளில் தரத்தை மேம்படுத்தவும், மதிப்பீட்டு முறைகள் சார்ந்த புதிய அணுகுமுறைகளை தெரிந்து கொள்ளவும் இந்த பயிற்சி நடந்தது. இன்றுடன், நிறைவுபெறும் இந்த பயிற்சி முகாமில், சென்னை, காஞ்சிபுரம், கடலுார், வேலுார், திருவண்ணாமலை, விழுப்புரம், திருவள்ளூர் ஆகிய ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த, 143 பேர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.