பள்ளிகளுக்கு, விஜயதசமி விடுமுறை, ஐந்து நாட்கள் விடப்பட்டது; இன்று
விடுமுறை முடிகிறது; நாளை, பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இந்நிலையில், தீபாவளி உட்பட பல்வேறு பண்டிகை நாட்களும், விடுமுறை நாட்களும் தொடர்ந்து வர உள்ளன. அதனால், நவம்பர் மற்றும் டிசம்பரில், குறைந்த நாட்களே வகுப்புகள் நடக்கும். எனவே, பாடங்களை விரைந்து முடிக்க, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும், பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, மாதந்தோறும் நடத்தப்படும் தேர்வுகள், பல மாவட்டங்களில் ரத்து செய்யப்பட்டுள்ளன. மாதத் தேர்வுகளுக்கு பதில், முன் அரையாண்டு தேர்வு நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.
அதாவது, அரையாண்டு தேர்வுக்கு முன்பாக, நவ., 8 முதல், 25க்குள் ஒரு தேர்வு நடத்தும்படி, பள்ளிகள் கேட்டு கொள்ளப்பட்டு உள்ளன. இதையடுத்து, டிச., மூன்றாம் வாரத்தில், அரையாண்டு தேர்வு நடத்தப்பட உள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.