WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, October 12, 2016

5134 மத்திய அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டிய நேரமிது!


மத்திய அரசின் பல்வேறு துறைகளில் நிரப்பப்பட உள்ள 2016-ஆம் ஆண்டிற்கான 5132 டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் மற்றும் கிளார்க் (கிரேடு- சி)
பணியிடங்களுக்கான அறிப்பை ஸ்டாப் செலக்சன் கமிஷன் (எஸ்எஸ்சி) இதற்கு +2 முடித்தவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதவி மற்றும் காலியிடங்கள் விவரம்: பதவி: Postal Assistant/Sorting Assistant - 3281 சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900 பதவி: Data Entry Operator - 1321 சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400 பதவி: Lower Division Clerk - 506 சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900 பதவி: Court Clerk - 26 சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900 வயது வரம்பு: 01.01.2017 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் வழங்கப்படும் தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் மேல்நிலைக் கல்வி (+2) அல்லது அதற்கு சமமான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சில பணிகளுக்கு ஹிந்தி அல்லது ஆங்கில மொழிகளில் தட்டச்சுத்திறன் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு, தட்டச்சு திறன் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பெண்கள், விதைவகளுக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை. விண்ணப்பிக்கும் முறை: www.ssconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை கணினிப்பிரதி எடுத்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். தேர்வு மையம்: தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, புதுச்சேரி ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07..11.2016 தேர்வு நடைபெறும் தேதி: 07.01.2017, 05.02.2017, 09.04.2017 மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://ssc.nic.in/SSC_WEBSITE_LATEST/notice/notice_pdf/CHSLE_2016_Notice_english.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.