தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்தும், 'குரூப் - 4' தேர்வுக்கு, இன்னும், 20 நாட்களே உள்ள நிலையில், 10ம் வகுப்பு
புத்தகங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு துறைகளில், இள நிலை உதவியாளர், வரி வசூலிப்பாளர், வரைவாளர், நில அளவையர் உட்பட, ஏழு வகை பதவிகளில், 5,451 பணியிடங்கள் காலியாக
உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான, 'குரூப் - 4' எழுத்துத் தேர்வை, நவம்பர், 6ல், டி.என்.பி.எஸ்.சி., நடத்துகிறது. தேர்வுக்கு, 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர். தேர்வில் வெற்றி பெற, குறைந்த பட்சம், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எனவே, தமிழக அரசின் சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் உள்ள, 10ம் வகுப்பு புத்தகத்தை படித்து, விண்ணப்ப தாரர்கள் தேர்ச்சி பெறலாம். தேர்வுக்கு இன்னும், 20 நாட்களே உள்ள நிலையில், விண்ணப்பதாரர்களுக்கு, 10ம் வகுப்பு புத்தகங்களின் தேவை அதிகரித்துள்ளது. தமிழ்நாடு அரசு பாட நுால் கழக விற்பனை மையங்களில், தினமும் பல நுாறு பேர், 10ம் வகுப்பு புத்தகங்களை வாங்குவதால், பாட நுால் கழகத்திலும், புத்தகங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.