WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, October 15, 2016

இரண்டு நாட்களில் 'நெட்' தேர்வு 'ரிசல்ட்'.


கல்லுாரி பேராசிரியர் பணிக்கான, 'நெட்' தகுதித் தேர்வு முடிவு, இரு நாட்களில்
வெளியாக உள்ளது. கல்லுாரிகளில், பேராசிரியர் பணியில் சேரவும், கல்லுாரி மற்றும் பல்கலைகளில், முழுநேர இளநிலை ஆராய்ச்சி மாணவராக சேரவும், பல்கலை மானியக் குழுவின், 'நெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., மூலம், ஜூலையில் நடத்தப்பட்ட இத்தேர்வில், எட்டு லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்வு முடிந்து மூன்று மாதங்களாகின்றன; இரண்டு நாட்களில், தேர்வு முடிவு வெளியாக உள்ளது. ஜனவரியில் நடக்க உள்ள, 'நெட்' தேர்வுக்கு, அக்., 17ல், 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு துவங்கும். ஜூலை தேர்வில் தேர்ச்சி பெறாதோர், இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.