முதல்வர் ஜெயலலிதா, உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள தாலும், 'நீண்ட நாட்கள் அவர் சிகிச்சை எடுக்க
வேண்டும்' என, மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதாலும், அவரது வசமிருந்த இலாகாக்கள் அனைத்தும், நிதி அமைச்சர் பன்னீர் செல்வத்தி டம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஜெ., சம்மதத்துடன், இந்த அறிவிப்பை வெளியிடுவ தாக, கவர்னர் வித்யாசாகர் ராவ் தெரிவித்துள்ளார். முதல்வர் ஜெயலலிதா, செப்.,22ல், காய்ச்சல் மற்றும் நீர்சத்துக் குறைவால்,சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்; அவருக்கு, தொடர் சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. துவக்கத்தில், 'ஒரு சில நாட்களில், முதல்வர் வீடு திரும்புவார்' என, கூறப்பட்டது. ஆனால், சில நாட்களுக்கு முன், 'அவர் நீண்ட நாட்கள், மருத்துவமனையில் தங்கி, சிகிச்சை பெற வேண்டும்' என, மருத்துவ மனை நிர்வாகம் தெரிவித்தது. சர்ச்சைகள் இதையடுத்து, அரசியல் ரீதியாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.'தமிழக அரசின்செயல்பாடு கள்தொய்வின்றி நடைபெற, துணை முதல்வர் அல்லது பொறுப்பு முதல்வரை நியமிக்க வேண்டும்; முதல்வர் வசமுள்ள இலாகாக் களை, மற்ற அமைச்சர்களுக்கு மாற்றித் தர வேண்டும்' என,பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க., வலியுறுத்தியது. பா.ம.க., உட்பட, வேறு சில கட்சிகளும் இதற்கு ஆதரவு தெரிவித்தன. இந்நிலையில், தலைமை செயலர் ராம மோகன ராவ், அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், எடப் பாடி பழனிச்சாமி ஆகியோரை, சமீபத்தில், கவர்னர் மாளிகைக்கு வரவழைத்து, தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் ஆலோசனை நடத்தினார். அப்போது, பொறுப்பு முதல் வரை நியமிப்பது தொடர்பாக, அவர்களி டம் வலியுறுத்தியதாக தெரிகிறது. அதனால், முதல்வர் வசமுள்ள இலாகாக்கள், மற்ற அமைச்சர்களுக்கு மாற்றிக் கொடுக்கப்பட லாம் அல்லது துணை முதல்வர் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என, செய்திகள் வெளியாகின. ஆனால், காவிரி விவகாரம் குறித்தே, அமைச்சர் களிடம் கவர்னர் ஆலோசித்ததாக, கவர்னர் மாளிகை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.