பண்டிகை முன்னிட்டு, அரசு
ஊழியர்களுக்கு, இன்று வரைஐந்து நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது.
இதனால், அரசு அலுவலகங்களில், பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. எனவே, நாளையும், நாளை
மறுநாளும், அரசு ஊழியர்கள் விடுப்பு எடுக்க, அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
இதுகுறித்து,
அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த மாத இறுதியில், உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதனால், அரசு நலத் திட்ட பணிகள் நிறுத்தப்பட்டன. இம்மாதம், 17, 19ல், நடக்கவிருந்த தேர்தலுக்கு, உயர் நீதிமன்றம் தடை விதித்ததால், நடத்தை விதிகள் விலக்கி கொள்ளப்பட்டன. இதனால், திட்ட பணிகள் முழு வீச்சில் துவங்க உள்ளன. இந்த சூழலில், ஆயுத பூஜை, விஜயதசமி, மொகரம் என, தொடர்ந்து விடுமுறை இருந்ததால், பலர் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். அவர்களில் பலர், வியாழன், வெள்ளியும் விடுப்பு எடுத்து கொள்வதாக, தொலைபேசியில் தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே, காலி பணியிடங்களால், ஒருவரேபலரது வேலையை செய்யவேண்டியுள்ளது. வியாழன், வெள்ளி விடுப்பு எடுத்தால், அரசு உதவியை எதிர்பார்த்து, அலுவலகம் வரும் மக்கள் பாதிக்கப்படுவர். எனவே, இரு நாட்களும் விடுப்பு எடுக்கக்கூடாது; கண்டிப்பாக அலுவலகம் வர வேண்டும் என, ஊழியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.