WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, October 4, 2016

கல்வி கட்டண குழு தலைவர் நியமனத்திற்கு கெடு!

தமிழ்நாடு தனியார் பள்ளிகள், கல்வி கட்டண நிர்ணயக்குழு தலைவர் பதவி காலியாக உள்ளது. சென்னையில் அதன் அலுவலகம், ஆறு மாதங்களாக பூட்டிய நிலையில் உள்ளது என, தினமலர் நாளிதழில், ஜூன், 17ல் செய்தி வெளியானது. தமிழகத்தில், 12 ஆயிரம் மெட்ரிக், நர்சரி, ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் உள்ளன. கட்டண நிர்ணயக்குழு தலைவர் பதவி காலியாக உள்ளதால், 2016- - 17க்கு கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை. தனியார் பள்ளிகள், தன்னிச்சையாக கட்டணம் வசூலிக்கின்றன. தலைவரை நியமிக்க, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு தாக்கல் செய்திருந்தார். தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எஸ்.நாகமுத்து அமர்வு விசாரித்தது. அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், தலைவரை நியமிப்பது தொடர்பாக இறுதி முடிவெடுக்க, மேலும், நான்கு வாரங்கள் அவகாசம் தேவை, என்றார். இதை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கை பைசல் செய்தனர். மேலும், உறுதியளித்தபடி, கட்டண நிர்ணயக்குழு தலைவரை நியமனம் செய்தது தொடர்பாக, நவ., 2ல் அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.