அதிகமான புத்தக சுமையை கண்டித்து மகாராஷ்டிரா மாநிலம் சந்திரபூரை சேர்ந்த 7ம் வகுப்பு படிக்கும் மாணவன் போராட்டத்தில் குதித்துள்ளான். பள்ளிக்கு அளவுக்கு அதிகமாக புத்தகங்களை சுமந்து செல்ல வேண்டியதிருப்பதால் அதை கண்டித்து அரசுக்கு எதிராக சந்திரபூர் வித்யாநிகிதேன் பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் ருக்வெல்த் ரல்க்வார் என்ற மாணவன் நகரின் மையப் பகுதியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கியுள்ளான். உடல் உபாதைகள் இந்திய சட்டத்தின் படி பள்ளி மாணவர்கள் கொண்டு செல்லும் புத்தகங்களின் மொத்த எடை மாணவன் உடல் எடையில் 10 சதவிகிதம் மட்டுமே இருக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆனால், நாட்டிலுள்ள பெரும்பாலான பள்ளிகளில் இது பின்பற்றப்படுவதில்லை. அளவுக்கு அதிகமான புத்தக சுமையால் கழுத்து வலி, முதுகு வலி, மற்றும் பல உடல் உபாதைகளுக்கு மாணவர்கள் ஆளாகி வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அரசு நடவடிக்கை ருக்வெத் ரல்க்வார் சி.பி.எஸ்.இ., பள்ளியில் படித்து வருவதால் தங்களுடைய மாநில அரசால் பள்ளிக்கு எதிராக நடவடிக்கைகள் உடனடியாக எடுக்க முடியாது. ருக்வெத் என்ற இந்த சிறுவனுக்காக எங்களது மாநில அரசு அனுதாபத்தை தெரிவிக்கிறது. இருந்த போதிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை மாணவன் பயிலும் பள்ளிக்கு அனுப்பி விசாரிக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மகாராஷ்டிரா மாநில கல்வி அமைச்சர் விநோத் தவாதே அறிவித்துள்ளார்
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.