WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, October 4, 2016

3 ஆயிரம் பி.எட். பட்டதாரிகள் கவலை.

மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களுக்கு மெயின் தேர்வு நடத்தி ஓராண்டுக்கு மேல் ஆகியும் முடிவு வெளியிடப்படவில்லை. தமிழக பள்ளிக்கல்வித் துறையில் மாவட்ட கல்வி அதிகாரி (டிஇஓ) பணியிடங்கள் 75 சதவீதம் பதவி உயர்வு மூலமாகவும், 25 சதவீதம் நேரடியாகவும் நிரப்பப்படுகின்றன. நேரடி நியமனத்துக்கான போட்டித் தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்துகிறது. அந்த வகையில், டிஇஓ காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தேர்வு 2014 ஜூன் 8-ம் தேதி நடத்தப்பட்டது. 11 காலியிடங்களுக்கான தேர்வை 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பி.எட். பட்டதாரிகள் எழுதினர். இதில் இருந்து, அடுத்தகட்டமான மெயின் தேர்வுக்கு சுமார் 3 ஆயிரம் பேர் அனுமதிக்கப்பட்டனர். மெயின் தேர்வு 2015 ஆகஸ்ட் 6, 7, 8 தேதிகளில் நடத்தப்பட்டது. தேர்வு முடிந்து ஓராண்டுக்கு மேல் ஆகியும் இன்னும் தேர்வு முடிவு வெளியிடப்படவில்லை. இதனால், தேர்வு எழுதியவர்கள் கவலையில் உள்ளனர். அவர்கள் கூறியதாவது: டிஇஓ நியமனம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இன்னும் மெயின் தேர்வு முடிவை டிஎன்பிஎஸ்சி வெளியிடவில்லை. மெயின் தேர்வு முடிவை வெளியிட்ட பிறகு அடுத்தகட்டமாக நேர்முகத்தேர்வு நடத்த வேண்டும். அப்படிப் பார்த்தால் பணிநியமனம் முடிய 3 ஆண்டுகள் ஆகிவிடும். உதவி தொடக்கக்கல்வி அதிகாரி பணியிடங்களுக்காக நடத்தும் போட்டித்தேர்வின் முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் சில மாதங்களிலேயே வெளியிட்டுவிடுகிறது. டிஎன்பிஎஸ்சி நடத்திய டிஇஓ மெயின் தேர்வு முடிவு ஓராண்டுக்கு மேல் ஆகியும் இன்னும் வெளியிடப்படவில்லை. தேர்வு முடிவை விரைவாக வெளியிட்டு, அதே வேகத்தில் நேர்முகத் தேர்வையும் முடித்து, பணிக்கு தேர்வு செய்யப்பட்டோர் பட்டியலை டிஎன்பிஎஸ்சி விரைவாக வெளியிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.