WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, October 18, 2016

டி.ஆர்.பி., தேர்வில் 'வாட்ச்' அணிய அனுமதி.

அரசு இன்ஜினியரிங் கல்லுாரி பேராசிரியர் பதவிக்கான எழுத்து
தேர்வில், தேர்வர்கள், 'வாட்ச்' அணிந்து வர, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசு பொறியியல் கல்லுாரிகளில், பேராசிரியர் பதவிக்கு, 222 பேர் புதிதாக நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான எழுத்து தேர்வு, 11 மாவட்டங்களில் உள்ள, தேர்வு மையங்களில், வரும், 22ல் நடக்கிறது. தேர்வு மையங்களை, டி.ஆர்.பி., அதிகாரிகளுடன், அரசு இன்ஜி., கல்லுாரி மற்றும் அண்ணா பல்கலை அதிகாரிகள், நேரடியாக கண்காணிக்க உள்ளனர்; போலீஸ் பாதுகாப்பும் போடப்படுகிறது. எலக்ட்ரானிக் இல்லாத சாதாரண, 'வாட்ச்' அணிந்து வரலாம்; வேறு எந்த பொருளையும் கொண்டு வரக்கூடாது. தேர்வில், 'அப்ஜெக்டிவ்' வினாக்கள் இடம்பெறும்; விடைகளை குறியிட, கறுப்பு அல்லது நீல வண்ண, 'பால் பாயின்ட்' பேனா பயன்படுத்த வேண்டும். விடைத்தாளில், 'ஒயிட்னர்' பயன்படுத்தக் கூடாது. தேர்வு மையத்துக்கு, காலை, 9:00 மணிக்கு மேல் வருவோருக்கு, அனுமதி இல்லை என, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.