WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, October 18, 2016

பள்ளிக்கு செல்லாமல் ஓட்டம் காட்டும் மாணவர்கள்.


கூடலுார் கல்வி மாவட்டத்தில், இடைநின்ற மாணவர்களை பள்ளிகளில் சேர்க்கும் பணியில் தொய்வு நீடிக்கிறது. கூடலுார்
கல்வி மாவட்டத்தில், கூடலுார், பந்தலுார் தாலுகாவில் உள்ள பள்ளிகள் இடம் பெற்றுள்ளன. தோட்ட தொழிலாளர்கள், பழங்குடியினத்தவரின் குழந்தைகள் மட்டுமே, இங்குள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கின்றனர். ஆசிரியர்கள் எழுச்சி சமீபகாலமாக, அரசு ஆசிரியர்கள் மத்தியில், மாற்று சிந்தனை வளர்ந்துள்ளதால், மாணவ, மாணவியரின் கல்வி மீதும், அவர்களின் தனிப்பட்ட திறமைகளை வெளிக் கொணர்வதிலும் அவர்கள் கூடுதல் கவனம் செலுத்தத் துவங்கியுள்ளனர். அதன்படி, அனைவருக்கும் கல்வி திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,) சார்பில், கூடலுார், பந்தலுார் தாலுகாவில், பழங்குடியின குழந்தைகள் தங்கி படிக்க, உண்டு உறைவிடப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. பழங்குடியின கிராமங்களை ஒட்டி செயல்படும், இப்பள்ளிகளில், சில பள்ளிகள் மட்டுமே சிறப்பாக செயல்படுகின்றன; பல பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை மிகக் குறைவு. ’டிமிக்கி’ கொடுக்கும் மாணவர்கள் பெரும்பாலான பழங்குடியின மாணவர்கள், பள்ளிக்கு செல்வதை தவிர்த்து, தங்களின் பெற்றோருடன் வேலைக்கு செல்வது, மீன் பிடிப்பது போன்ற பணிகளில் ஆர்வம் காட்டுகின்றனர். உறைவிடப் பள்ளிகளின் ஆசிரியர்கள், பழங்குடியின கிராமங்களில், வீடு, வீடாக சென்று, பெற்றோர் மத்தியில், விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும், பள்ளிக்கு வராமல், மாணவ, மாணவியர் ஓடி ஒளிந்துக் கொள்வதால், அவர்களை பள்ளிக்கு வரவழைப்பது, சவாலான பணியாக மாறியுள்ளது. எஸ்.எஸ்.ஏ., அலுவலர்களும், பழங்குடியின கிராமங்கள் தோறும் சென்று, பள்ளி செல்லா குழந்தைகளை அடையாளம் கண்டு, அவர்களை பள்ளிகளில் சேர்க்க முயற்சி எடுத்து வருகின்றனர். துவக்கத்தில், சுறு, சுறுப்பாக இயங்கிய இப்பணியில், சமீபகாலமாக தொய்வு ஏற்படுகிறது. அதிகரிக்கும் இடைநிற்றல் இதனால், பெரும்பாலான பழங்குடியின கிராமங்களில், இடைநிற்றல் அதிகரித்துள்ளது. இதில், தேவர்சோலை அருகே கவுண்டங்கொல்லி, மண் வயல், மூலச்செருமுள்ளி பழங்குடியின கிராமங்களில், 25க்கும் மேற்பட்ட மாணவர்கள், பள்ளி படிப்பை பாதியில் விட்டுள்ளது, தெரிய வந்துள்ளது. பள்ளி தலைமையாசிரியர் முருகேசன், மேற்கொண்ட கள ஆய்வில், இங்குள்ள மாணவர்கள், கவுண்டங்கொல்லி ஆரம்பப் பள்ளியில், துவக்கக் கல்வியை முடித்து விட்டு, உயர் கல்விக்கு செல்லாமல் இருப்பது தெரிய வந்துள்ளது. அவ்வாறு, இடை நின்ற மாணவர்களை, கூடலுாரில் செயல்படும் உண்டு உறைவிட மையத்தில் சேர்த்து படிக்க வைக்க அவர், நடவடிக்கை எடுத்து வருகிறார். தலைமையாசிரியர் முருகேசன் கூறுகையில்,பள்ளி செல்வதன் அவசியம் குறித்து, மாணவ, மாணவியர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்; அவர்களை பள்ளிகளில் சேர்க்க முயற்சி எடுக்கப்படும், என்றார். எஸ்.எஸ்.ஏ., வட்டார மேற்பார்வையாளர் முருகேசன் கூறுகையில், பழங்குடியின மாணவர்கள் மத்தியில், எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், அவர்கள் புரிந்துக் கொள்வதில்லை. தற்போது, புதிதாக கூடலுார், அம்பலமூலாவில் உறைவிட மையங்கள் துவங்கப்பட்டுள்ளன. இங்கு, தலா, 200 மாணவர்கள் தங்கி படிக்கலாம். எங்கெல்லாம் மாணவர் வருகை குறைந்துள்ளதோ, அப்பகுதியில் உள்ள பள்ளி ஆசிரியர்களின் உதவியுடன் நேரில் சென்று, பெற்றோர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி, இடை நின்ற மாணவர்களை உறைவிட மையத்தில் சேர்க்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது, என்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.