WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, October 17, 2016

மாணவர்களின் தகவல் பதிவு செய்ய உத்தரவு.

கல்வி தகவல் மேலாண்மை இணையதளத்தில், ஒன்றாம் வகுப்பு மாணவர்களின் தகவல்களை, இம்மாத இறுதிக்குள், பதிவு செய்ய
வேண்டுமென்ற, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு, ஸ்மார்ட் கார்டு வழங்கும் நோக்கில், கல்வி தகவல் மேலாண்மை இணையதளத்தில் (எமிஸ்), மாணவர்களின் தகவல்கள் பதிவு செய்யப்படுகின்றன. இதில், நடப்பாண்டில் புதிதாக சேர்ந்த, ஒன்றாம் வகுப்பு மாணவர்களின், தகவல்களை பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அனைவருக்கும் கல்வி இயக்கக, மாநில திட்ட இயக்குனர் பூஜா குல்கர்ணி வெளியிட்ட அறிக்கையில், எமிஸ் இணையத்தளத்தில், இரண்டாம் வகுப்பு முதல், பிளஸ்2 வரையிலான மாணவர்களின் தகவல்கள், ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த மாணவர்கள், வேறு பள்ளிக்கு மாறியிருந்தால், தகவல்களை புதுப்பிப்பது அவசியம். மேலும், ஒன்றாம் வகுப்பு மாணவர்களின் பெயர், பாலினம், பெற்றோர் பெயர், பிறந்ததேதி, ஆதார் எண் உள்ளிட்ட அடிப்படை தகவல்களை பதிவு செய்து, இம்மாதம்30ம் தேதிக்குள், சமர்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.