WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, October 17, 2016

மாணவரை போட்டி தேர்வுக்கு தயார்படுத்தும் ஆசிரியர்கள்.

போட்டி தேர்வுகளில் அதிகளவில் பங்கேற்கும் வகையில் மாணவர்களை ஆரம்ப கல்வி முதல் தயார்படுத்த ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8, 9, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய திறனாய்வு தேர்வு, தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவி திட்டம், ஊரக திறனாய்வு தேர்வுகள் நடத்தப்படுகிறது. இதில், எட்டு, ஒன்பது, பத்தாம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால் அவர்களுக்கு கல்லுாரி மேற்படிப்பு வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதன்படி, தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி திட்டத்தில், எட்டாம் வகுப்பில் இந்த தேர்வை எழுதினால், மாதம்500 ரூபாய் வீதம் ஆண்டிற்கு 6,000 ரூபாய் பிளஸ் 2 வரை வழங்கப்படுகிறது. ஊரக திறனாய்வு தேர்வில் ஆண்டிற்கு 1000 ரூபாய் வீதம் வழங்கப்படுகிறது. தேர்வில் 50 சதவீதம் மதிப்பெண் பெற வேண்டும். தேசிய திறனாய்வு தேர்வில் பிளஸ் 1, பிளஸ்2 வகுப்புகளில் ஆண்டிற்கு தலா 1,250 ரூபாய் வழங்கப்படுகிறது.இதில் எஸ்.சி., எஸ்.டி., மாணவர்கள் 32 சதவீதம், பொதுப்பிரிவினர் 40 சதவீதம் மதிப்பெண் பெற்றால் போதுமானது. தேசிய அளவில் இதுபோன்ற தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில் குறைவாக இருப்பதால், அவர்களை அதிகளவு தேர்வு எழுத வைக்கவும், இதன் மூலம் போட்டி தேர்வுகளுக்கு தயார் படுத்தவும், அனைவருக்கும் கல்வி திட்டம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக நவம்பர் மாதம் 83 ஆயிரத்து348 ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் மூலம் உதவித்தொகை பெறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். போட்டி தேர்வுகள் குறித்து பயிற்சி பெறும் ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு பயிற்சியளிக்கப்பட உள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.