WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, October 16, 2016

தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் படிப்புகளை வழங்க "இக்னோ' முடிவு: துணைவேந்தர் ரவீந்திரகுமார் தகவல்.

இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் (இக்னோ) படிப்புகளை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்தப் பல்கலைக்கழத் துணைவேந்தர் ரவீந்திரகுமார் தெரிவித்தார். "இக்னோ'வின் தென் மண்டல இயக்குநர்கள் ஆலோசனைக் கூட்டம் மதுரை மண்டல மையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் துணைவேந்தர் ரவீந்திரகுமார், மண்டல மையங்களின் இயக்குநர் வி. வேணுகோபால் ரெட்டி மற்றும் மதுரை, திருவனந்தபுரம், கொச்சி, ஹைதராபாத், விஜயவாடா, போர்ட்பிளேயர் ஆகிய மண்டல மையங்களின் இயக்குநர்கள் பங்கேற்றனர். கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் துணைவேந்தர் ரவீந்திரகுமார் கூறியதாவது: "இக்னோ'வில் வழங்கப்படும் படிப்புகளில் முக்கியமானவற்றை அந்தந்த மாநில மொழிகளில் மொழிபெயர்த்து வழங்கத் திட்டமிட்டுள்ளோம். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் பாடப் புத்தகங்கள் அச்சிடப்படும். மாணவர்கள் தங்கள் தாய்மொழியில் தேர்வு எழுதவும் அனுமதிக்கப்படுவர். எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு வரும் கல்வி ஆண்டு முதல் கல்விக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படும். பல்கலைக்கழகப் பேராசிரியர்களுக்காக இணையவழிக் கற்பித்தல் படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 60 ஆயிரம் ஆசிரியர்கள் சேர்ந்துள்ளனர். இப்படிப்பை முடித்தவர்கள் அருகில் உள்ள "இக்னோ' கல்வி மையங்களில் வார இறுதி நாள்களில் ஆசிரியர்களாகப் பணியாற்றலாம். கல்வியை வீடுகளுக்கே கொண்டு சேர்க்கும் விதமாக தொலைக்காட்சி வழிக் கல்வியையும் அறிமுகப்படுத்தியுள்ளோம். தூர்தர்ஷன் மூலம் 24 மணி நேரமும் "இக்னோ' அலைவரிசையை பார்க்க முடியும். முதல்கட்டமாக கலாசாரம், மானுடவியல், வேளாண்மை, ஆசிரியர் பயிற்சி ஆகிய பாடப் பிரிவுகளில் கற்பிக்கப்பட்டு வருகிறது. "பாரத் அபியான்' திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 250 கிராமங்களைத் தத்தெடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மதுரை மண்டலத்தில் அலங்காநல்லூர், புளியங்குளம், பொதும்பு ஆகிய கிராமங்கள் தத்தெடுக்கப்பட்டுள்ளன. இந்தக் கிராமங்களில் சுகாதாரம், தாய் சேய் நலம், சுற்றுப்புறச் சூழல், உடல்நலம், இயற்கை வேளாண்மை ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்படும். கல்வித் தரத்தை மேம்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், புதிய அணுகுமுறைகள், கிராமப்புறங்களுக்கு உயர்கல்வியைக் கொண்டு செல்வது, உயர்கல்வியில் தொழில்நுட்ப பயன்பாடு ஆகியன குறித்து மதுரையில் இருநாள்கள் நடைபெறும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.