WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, October 17, 2016

கை கழுவும் தினத்தை ‘கை கழுவிய’ கல்வித்துறை.


உலக கை கழுவும் தினத்தில், மாணவர்களிடையே அது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு, பள்ளி கல்வித்துறை மறந்தது, அதிருப்தியை
ஏற்படுத்தியுள்ளது. உலக சுகாதார அமைப்பு சார்பில், ஒவ்வொரு ஆண்டும், அக்., 15ம்தேதி, கை கழுவும் தினம் கொண்டாடப்படுகிறது; இந்நாளில், கைகளை சுத்தமாக வைத்திருப்பதன் அவசியம் குறித்து, பள்ளி மாணவர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன. உடல் ஆரோக்கியத்துக்கான முதல்படி, நமது கைகளை சுத்தமாக வைத்திருப்பது; அதாவது கை கழுவி சுத்தமாக வைத்திருப்பதால், நோய் பரவலை தடுக்கலாம். காற்றின் மூலம், நீரின் மூலம் மற்ற பொருட்களை தொடுவதன் மூலம் பரவும் நோய்கள் அதிகம். இப்படிப்பட்ட நோய் பரவாமல் தடுக்க, கை கழுவுதால் மிக அவசியம் என்று, இந்நாளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு, திருப்பூர் கே.எஸ்.சி., பள்ளி, ஜெய்வாபாய், பழனியம்மாள், நஞ்சப்பா பள்ளிகளில், உலக கழுவும் தின நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நடப்பு ஆண்டு, இதற்கான பணிகளில், மாவட்ட கல்வித்துறை பெரியதாக அக்கறை காட்டவில்லை. மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தாதது, கல்வியாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.