தமிழக அரசு ஊழியர்களுக்கு ஏற்கெனவே அறிவித்தபடி வெள்ளிக்கிழமையே (அக்.28) ஊதியம் வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ்
வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தீபாவளி பண்டிகை சனிக்கிழமை(அக்.29) வருவதால், ஊதியத்தை முன்கூட்டியே வழங்குமாறு தமிழ்நாடு அரசு ஊழியர் அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்தன. புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமையே (அக்.25) ஊதியம் வழங்கப்பட்டதால் தமிழக அரசு ஊழியர்களிடையே இந்தக் கோரிக்கை தீவிரமடைந்தது.
இதனையடுத்து வெள்ளிக்கிழமை ஊதியம் வழங்கப்படும் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்த நிலையில், அந்த அரசாணையை மாலையே ரத்து செய்த அரசு, வழக்கம்போல் 31 -ஆம் தேதி தான் ஊதியம் வழங்கப்படும் என்று புதிய அரசாணையை வெளியிட்டது. தமிழக அரசின் இந்த அணுகுமுறை எந்த வகையிலும் நல்லதல்ல. அரசின் இந்தக் குளறுபடியால் அரசுப் பணியாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊதியத்தை முன்கூட்டியே வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தவறானதோ, நிறைவேற்றுவதற்கு சாத்தியமற்றதோ இல்லை.
ஒருவேளை, சாத்தியமற்றதாக இருந்தால்கூட அதைச் சாத்தியமாக்குவதுதான் நிர்வாகத்தின் பணியாக இருக்க வேண்டுமே தவிர, அறிவித்ததைத் திரும்பப் பெறுவது முறை இல்லை.
எனவே, அரசு ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கான அக்டோபர் மாத ஊதியத்தை வெள்ளிக்கிழமையே வழங்க அரசு முன்வர வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.