WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, October 27, 2016

குரூப் 4: தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை பதிவிறக்கலாம்: டி.என்.பி.எஸ்.சி. தகவல்.


டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை (ஹால் டிக்கெட்) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 5,451 காலிப் பணியிடங்களுக்கான 
நவம்பர் 6-இல் நடைபெறவுள்ள எழுத்துத் தேர்வுக்காக, 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை www.tnpscexams.net, www.tnpsc.gov.in ஆகிய இணையதளங்களில் விண்ணப்ப பதிவு எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தாலும் அதற்கான காரணத்தையும் தெரிந்துகொள்ளலாம். சரியாக விண்ணப்பம் பதிந்து, உரிய கட்டணம் செலுத்தியும் நுழைவுச்சீட்டு கிடைக்காதவர்கள் பணம் செலுத்துச்சீட்டின் நகலுடன் தங்களது முழு விவரங்களைக் குறிப்பிட்டு contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அக்டோபர் 31-க்குள் அனுப்பி வைக்க வேண்டும். இதுதொடர்பாக சந்தேகம் இருப்பின் 1800 425 1002 என்ற கட்டணமில்லா எண்ணிலும், contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்புகொள்ளலாம் என்று தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் வெ.சோபனா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.