Thursday, October 27, 2016
அண்ணாமலைப் பல்கலை.யில் சான்றிதழ் வழங்க சிறப்பு முகாம்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சான்றிதழ் பெறாத மாணவர்களுக்கு அதை வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககம் மூலம் கடந்த 15 ஆண்டுகளாகப் படித்து தேர்ச்சி பெற்றவர்களில் சிலர் தங்களது மதிப்பெண் பட்டியல் (Mark Sheet), பட்டச் சான்றிதழை(Covocation) இதுவரை பெறாததால் அவை தேர்வுத் துறையில் உள்ளன.
அந்த மாணவர்கள் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்வதற்கான சிறப்பு முகாம் டிசம்பர் 9 முதல் 11-ஆம் தேதி வரை பல்கலைக்கழகத் தேர்வுத் துறை கட்டடத்தில் நடைபெற உள்ளது. எனவே, இதுவரை சான்றிதழ் பெற்றுக் கொள்ளாதவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பயன்பெறலாம். மாணவ, மாணவிகள் தங்களது அடையாள அட்டையுடன் நேரில் வந்து, பல்கலைக்கழகத்துக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையைச் செலுத்தி சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04144-238027, 237368, 238358, 04144-238282, 238248 EX: 578 என்ற எண்களிலும், aucertisplcamp16@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொண்டு தகவல் பெறலாம் என தேர்வுக் கட்டுப்பாடு அதிகாரி ராம.சந்திரசேகரன் அறிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.