Friday, November 18, 2016
10 அரசு இன்ஜி., கல்லூரிகளில் 7 முதல்வர் பணியிடங்கள் காலி.
தமிழகத்தில், 10 அரசு பொறியியல் கல்லுாரிகளில், ஏழு முதல்வர் பணியிடங்கள், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக கிடக்கின்றன. தமிழகத்தில், 10 அரசு பொறியியல் கல்லுாரிகள் உள்ளன. இவற்றில், முதல்வர், பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதால்,
மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுகிறது.
தற்போதைய நிலவரப்படி, 10 அரசு பொறியியல் கல்லுாரிகளில், ஏழு முதல்வர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மூத்த பேராசிரியர்கள், கூடுதல் பொறுப்பாக, முதல்வர் பணியை கவனித்து வருகின்றனர். கல்லுாரிகளின் அனைத்து செயல்பாடுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டிய முதல்வர் பணியிடங்களை நிரப்புவதில், இரண்டு ஆண்டுகளாக, உயர்கல்வி துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
பொறியியல் கல்லுாரி பேராசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: பல பேராசிரியர்கள், 30 ஆண்டுகள் பணிபுரிந்தும் கூட, பதவி உயர்வின்றி உள்ளனர். எனினும், காலியிடங்கள்
நிரப்பப்படவில்லை. பேராசிரியர் பணியிடங்கள் அதிக அளவில் காலியாக உள்ள நிலையில், 192 இடங்களுக்கு மட்டுமே, போட்டி தேர்வு நடத்தி முடித்துள்ளனர். திருச்சி, தஞ்சாவூர், போடி, தர்மபுரி பகுதிகளில், புதிதாக துவங்கப்பட்ட கல்லுாரிகளில், இயற்பியல், வேதியியல், கணித பாடப் பிரிவுகளுக்கு பேராசிரியர் பணியிடங்கள், இதுவரை உருவாக்கப்படவில்லை. பிரச்னைகளுக்கு தீர்வு காண, உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.