WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, November 21, 2016

15 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்.

"நாமக்கல் பூங்கா சாலையில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. நாமக்கல் பூங்கா சாலையில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். பொருளாளர் ஹரிஹரன் வரவேற்றார். மாநில துணை பொதுசெயலாளர் மயில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். மாவட்ட செயலாளர் முருகசெல்வராசன் கோரிக்கைகள் குறித்து பேசினார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் மங்களகவுரி, பாலமுரளி, பொதுக்குழு உறுப்பினர்கள் கலைச்செல்வன், முத்துகுமரன், தங்கவேல் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். புதிய தன்பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும். 7வது ஊதியக்குழுவை உடனடியாக அமைத்து மத்திய அரசுக்கு இணையான ஊதியம் மற்றும் படிகள் வழங்க வேண்டும். உதவி தொடக்கக்கல்வி அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். புதிய ஆசிரியர் நியமனங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. இதில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் கணேசன், தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன், அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் இளங்கோவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கூட்டணியின் மாவட்ட துணை தலைவர் சாந்தி நன்றி தெரிவித்தார்." - 15 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் http://tz.ucweb.com/11_XfAz

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.