WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, November 21, 2016

தமிழக கல்வி மற்றும் சிறைத்துறையில் சைக்காலஜிஸ்ட் பணி: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.

தமிழக அரசின் கல்வி மற்றும் சிறைத்துறைகளில் நிரப்பப்பட உள்ள 8 சைக்காலஜிஸ்ட் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு
பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் டிசம்பர் மாதம் 14-அம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அறிக்கை எண்.20/2016 தேதி: 15.11.2016 பணி: Superintendent of Approved Schools for Boys (Now Government Children Home for Boys) (Post Code No: 3007) (2015 -2016) காலியிடங்கள்: 03 வயதுவரம்பு: 18 - 35க்குள் இருக்க வேண்டும். தகுதி: பி.ஏ, பி.எஸ்சி, பி.காம் பட்டம் அல்லது Criminology and Forensic Science போன்ற பிரிவில் டிப்ளமோ தேர்ச்சியுடன் B.T, L.T, B.Ed முடித்திருக்க வேண்டும். பணி: Psychologist in Department of Social Defence (Post Code No: 3006) (2015 - 2016) காலியிடங்கள்: 03 தகுதி: Psychology துறையில் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். வயதுவரம்பு: 18 - 35க்குள் இருக்க வேண்டும். பணி: Psychologist in Tamil Nadu Jail Service (Post Code No: 1942) (2016 - 2017 காலியிடங்கள்: 01 வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும். தகுதி: Psychology துறையில் முதுகலை பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பணி: Psychologist in Government Institute for Mentally Retarded, Tambaram (Post Code No: 1795) (2015 - 2016) காலியிடங்கள்: 01 வயதுவரம்பு: 28 முதல் 45க்குள் இருக்க வேண்டும். தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் பட்டம் பெற்று 3 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: 15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400 தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். Superintendent பணிக்கான எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 25.02.2017 Psychologist பணிக்கான எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 26.02.2017 எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம்: சென்னை தேர்வுக் கட்டணம்: ரூ.25. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும் அல்லது வங்கி மூலம் செலுத்தலாம். நிரந்த பதிவு இல்லாதவர்கள் தேர்வுக் கட்டணத்துடன் ரூ.50 சேர்த்து மொத்தம் ரூ.175 செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.12.2016 வங்கியில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 16.12.2016 மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/2016_20_not_eng_appd_schools_tnj_services.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.