WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, November 6, 2016

நவ., 17ல் ஆர்ப்பாட்டம் : ஆசிரியர்கள் அறிவிப்பு.


அகவிலைப்படி உயர்வுக் கோரி, தமிழகம் முழுவதும், நவ., 17ல், ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக, அரசு பள்ளி ஆசிரியர்கள் அறிவித்து உள்ளனர். இது
குறித்து, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கழக தலைவர், கே.பி.ஓ.சுரேஷ் கூறியதாவது: மத்திய அரசின் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, ஊதிய உயர்வு, அகவிலைப்படி உயர்வுக் கோரி, மனுக்கள் அளித்துள்ளோம்; அரசு இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, எட்டாவது ஊதியக் குழுவை ஏற்படுத்துதல், அடிப்படை ஊதியத்துடன் அகவிலைப்படியை இணைத்தல், தேர்வு பணிகளுக்கு உழைப்பு ஊதியத்தை அதிகரித்தல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, நவ., 17ல், ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன், இந்த ஆர்ப்பாட்டம் நடக்கும்.இவ்வாறு அவர் கூறினார். 

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.